9 இடங்களில் வெயில் சதம்..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமையன்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. கோடை காலம் தொடங்கியதை அடுத்து, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
ஒரிரு மாவட்டங்களில் மழை பெய்தபோதும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, திருத்தணியில் 104 டிகிரி, மீனம்பாக்கத்தில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் கடலூரில் 102.56 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி, மதுரையில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம் மற்றும் புதுச்சேரியில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





