4 நாய்கள் விஷம் வைத்து கொலை – தோட்ட பணியாளர் கைது
ஈரோடு மாவட்டம் சொக்கநாதபாளையத்தில் விஷம் வைத்து 4 வளர்ப்பு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், தோட்ட உரிமையாளரும் பா.ஜ.க நிர்வாகியுமான கலைவாணி சென்னிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாய்களுக்கும் விஷம் வைத்தது தொடர்பாக தோட்ட பணியாளர் பழனிசாமியிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தோட்டத்து வீட்டில் பராமரிக்கப்படும் கோழிகளை கடித்ததால் நாய்களை குருணை மருந்து வைத்து கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.



