--- --:--:-- --

மரம் வளர்த்தால் 2,500 ரூபாய் அரசு அதிரடி அறிவிப்பு..!

7

ரம் வளர்ப்பார்கள் ஆண்டுதோறும் 2,500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. ஹரியானாவில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்பொழுது பேசிய அவர் 75 வயதுக்கு மேற்பட்ட மரங்களை பாதுகாப்பான சங்கம் உறுதி கொண்டுள்ளது என கூறினார். வயதானவர்களுக்கு ஒய்வூதியம் வழங்குவதை போல் 75 வயதுக்கும் மேற்பட்ட மரங்களுக்கு ஆண்டுதோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் எனவும், அந்த மரத்தை பராமரிப்பவர்களின் வங்கிக்கு நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

 

இதற்காக ஹரியானா பிராணவாயு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர் இந்த திட்டத்தின் மூலம் பழமையான மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

 

மனிதர்கள் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிக முக்கியம். மனிதர்கள் மரங்களை பாதுகாக்காவிட்டால் ஆக்ஸிஜன் கிடைப்பது சிரமம் ஆகிவிடும் என அவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon