நள்ளிரவில் காவல் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு!
அரக்கோணம் காவல் நிலையத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் நள்ளிரவில் ஆய்வு நடத்தியதற்கு அதிமுக மக்களவை உறுப்பினர் இன்பதுரை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், காவல் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும், நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து ஆய்வு நடத்த வேண்டிய தேவை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காவலர்களை நிற்க வைத்து அமைச்சர் அதிகாரம் செலுத்துவது என்ன வகையான நடைமுறை என்றும், ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் காணொளி எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது என்றும் வினவியுள்ளார். தவெக ஆட்சியில் காவல்துறையின் சுதந்திரமும், அரசியல் தலையீடற்ற செயல்பாடும் கேள்விக்குறியாக்கப்படுகிறதா என்றும் இன்பதுரை தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




