--- --:--:-- --

அரியலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பு : பொதுமக்கள் எதிர்ப்பு

13

அரியலூர் மாவட்டம் தத்தனூர் பொட்டகொல்லை கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் குற்றம்சாட்டிய கிராம மக்கள், கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

 

மேலும், குடியிருப்புப் பகுதி மற்றும் விவசாய நிலங்களை ஒட்டியுள்ள இடத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டதற்கு எதிராக தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon