சர்க்கரை தட்டுப்பாடு: ஆலைகளில் நேரடி ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு
நாடு முழுவதும் சர்க்கரைக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அனைத்துச் சர்க்கரை ஆலைகளிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ள மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சர்க்கரை ஆலைகளில் நிலவும் கையிருப்பு மற்றும் உற்பத்தி நிலவரங்களை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும், விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




