ஈரான் பள்ளி மீதான தாக்குதல்: 27-ல் ஐ.நா. அவசர விவாதம்
ஈரானில், பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதலில் 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் 27 அன்று அவசர விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை மூலம் பிப். 28 அன்று ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில், ஏராளமான குழந்தைகள் உள்பட 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலானது போர்க் குற்றம் எனக் கூறி சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஒரே வாரத்தில் வளைகுடா போர் பற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் 27 நடைபெறும் 2 ஆவது விவாதத்தில், ஈரான், சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




