--- --:--:-- --

சென்னையில் உயர்ந்த டீ, காபி விலை..!

4

ஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழல் உணவகங்கள் மற்றும் சிறு தேநீர்க் கடைகளை வெகுவாகப் பாதித்துள்ளதால், பொதுமக்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளன.

 

சென்னையில் நிலவும் இந்த இக்கட்டான நிலையால், பெரும்பாலான ஹோட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெரைட்டி ரைஸ் மட்டுமே கிடைக்கும் என்ற அறிவிப்புப் பலகைகளை உணவக உரிமையாளர்கள் வைத்துள்ளனர். கேஸ் தட்டுப்பாட்டால் சமையல் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாததே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் தேநீர்க் கடைகளில் நிலைமை மோசமாக உள்ளது. சென்னையில் இதுவரை 10 ரூபாய் அல்லது 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கப் டீ மற்றும் காபியின் விலை தற்போது 20 ரூபாயாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மாலை நேர சிற்றுண்டிகளான பஜ்ஜி, போண்டா போன்ற தின்பண்டங்களின் எண்ணிக்கையும் கடைகளில் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தேநீர்க் கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, வணிக சிலிண்டர்கள் முறையாகக் கிடைப்பதில்லை என்றும், கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டரை 5,000 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை விற்பனை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தட்டுப்பாட்டை நீக்க உடனடி வழிவகை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon