--- --:--:-- --

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

1

வங்கக் கடலில் இரு நாள்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இரு நாள்களில் உருவாகக்கூடும் எனவும் கணித்துள்ளது. அதேநேரத்தில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும், 19 மற்றும் 20ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon