“சுவமித்வா ” திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை – டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

சுவமித்வா ” திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் மொத்தம் 1.86 லட்சம் கிராமங்களில் 3.06 கோடி சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் தமிழ்நாடு, டெல்லி, அசாம், ஜார்கண்ட், தெலுங்கானா, சிக்கிம், கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இந்த சுவமித்வா ஊரக குடியிருப்பு பகுதிகள் நவீன நில அளவை திட்டம் செயல்படுத்தப்பட வில்லை.: என்று மக்களவையில் தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் பதில அளித்துள்ளார்.