--- --:--:-- --

போதைப் பொருள் குற்றச்சாட்டில் சென்னையில் பிரபல நடிகை கைது..!

6

சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் பயன்படுத்தியதாக கடந்தாண்டு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இது, தமிழ் திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகை அஞ்சு கிருஷ்ணனும் சிக்கியுள்ளார்.

 

சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக விக்னேஸ்வரன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அவருக்கு போதைப் பொருள் விநியோகம் செய்ததாக வெங்கடேஷ் குமார் என்பவரும் பிடிபட்டார். இருவரிடமும் நடத்திய விசாரணையில், திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா, துணை நடிகை நிவிதே உள்ளிட்டோரும் சிக்கியுள்ளனர்.

மலையாள திரையுலகில் ஆகாசம் கடன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சு கிருஷ்ணா. வெள்ளிமலை என்ற திரைப்படம் வாயிலாக தமிழில் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இந்நிலையில், வளசரவாக்கத்தில் போதைப்பொருள் பயன்பாடு தகவலின்படி விக்னேஸ்வரன் என்ற இளைஞரை காவல்துறையினர் பிடித்து, அவரிடம் மெத்தபெட்டைன் போதைப்பொருளை கைப்பற்றினர்.

விசாரணையில், அவருக்கு போதைப்பொருளை சப்ளை செய்த வெங்கடேஷ் குமார் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா, துணை நடிகை நிவேதா உள்ளிட்டோர் சிக்கினர். மேலும், கார்த்திக் ராஜா, எஸ்வந்த், ஸ்ரீராம், தமிம் நிஸ்வான் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆறு கிராம் மெத்தம்பேட்டமைன், 7 கிராம் ஒஜி கஞ்சா, 15 கிராம் கஞ்சா, புகைபிடிக்கும் போங், ஒன்பது மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon