திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல – பிரதமர் நரேந்திர மோடி
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடிக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தியாகிகள் சந்திப்பில் இருந்து கிழக்கு கோட்டை வரை ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
இதனை தொடர்ந்து, புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி அளிக்கும் பிரதமர் ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நவீன தபால் நிலையம் ஒன்றையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதேபோல், கேரள திருவனந்தபுரத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல. இது வரலாற்று சிறப்புமிக்கது.
கேரளாவில் பாஜக அரசுக்கு திருவனந்தபுரம் அடித்தளமிட்டுள்ளது. திருவனந்தபுரம் நகராட்சியில் பணியாற்ற பாஜகவுக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்கள். அதன் எதிரொலி கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் கேட்கப்படுகிறது” என பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




