--- --:--:-- --

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து குழப்பத்தை ஏற்படுத்தும் – துரை வைகோ

8

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க எம்.பி. துரை வைகோ பேட்டி: “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்தும் தி.மு.க அரசு குறித்தும் வைத்த விமர்சனம் குறித்து ஒரு நாளிதழ் என்னிடம் கேள்வி கேட்டபோது, அவருடைய கருத்துகள் எந்த தரவுகளும் இல்லாமல், உண்மைக்கு புறம்பானவை, கண்டிக்கத்தக்கது என்று கூறியதுடன், இதற்கு காங்கிரஸ் தலைமை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினேன்.

 

பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸுக்கும் கூட்டணிக்கும் தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கூறினேன். பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சசிகாந்த் செந்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon