--- --:--:-- --

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை ஆலோசனை..!

5

மிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

 

திமுக-வை இம்முறை வீழ்த்தியே ஆக வேண்டும் என டெல்லி பாஜக மேலிடம் கங்கணம் கட்டி காய்களை நகர்த்தி வருகிறது.
அதற்காக வலுவான கூட்டணியை அமைக்க தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டார். இதனிடையே பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக முன்னாள் பிரபலங்களான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் வெளியேறியது பின்னடைவாக பாஜக மேலிடம் பார்க்கத் தொடங்கியுள்ளது.

 

அதனால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு வரவழைத்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையையும் நேற்று மாலை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா மற்றும் பாஜக அமைப்பு செயலாளர் பி எல் சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில் கட்சியில் முக்கியப் பதவி எதுவும் தரப்படாததால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் டெல்லியில் அமித் ஷாவை அண்ணாமலை சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் டிடிவி தினகரனை மீண்டும் பாஜக அணிக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon