ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி..!

ழை காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

 

இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆனது.
முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

 

இந்த நிலையில் 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கேபா நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிசேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். அபிசேக் சர்மா தொடக்கத்திலேயே கொடுத்த 2 கேட்ச்சுகளை ஆஸ்திரேலிய வீரர்கள் தவற விட்டனர்.

 

4.5 ஓவர்களில் இந்திய அணி 52 ரன்கள் எடுத்திருந்தபோது அபிசேக் சர்மா 23 ரன்களுடனும், சுப்மன் கில் 29 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.