--- --:--:-- --

டி20 கிரிக்கெட் போட்டி : அபார வெற்றி பெற்றது இந்திய அணி

2

ஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

 

இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில் தற்போது டி20 போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தன.

 

இந்நிலையில் 4 ஆவது போட்டி குயின்ஸிலாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 28 ரன்களும், ஷிவம் துபே 22 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா மற்றும் நாதன் எல்லிஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மார்ஷ் 30 ரன்களும், மேத்யூ ஷார்ட் 25 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

 

சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்
அடுத்து வந்தவர்கள் இதனை பயன்படுத்தாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon