--- --:--:-- --

அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது..!

5

மெரிக்காவில் சரக்கு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 3 பேர் உயரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் லூயிஸ்வில் விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

 

இதனால் தீம்பிழம்புகள் உருவாகி பெரும் புகை மண்டலமே உருவானது.
சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட எரிபொருளுடன் விமானம் வெடித்துச் சிதறியதே பெரிய அளவுக்கான தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

 

இந்த விபத்தில் சரக்கு விமானத்தில் பயணித்த 3 ஊழியர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் விமானம் விழுந்த பகுதியில் விபத்தில் சிக்கி மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.விபத்தில் சிக்கிய இந்த விமானம், 34 ஆண்டுகள் பழமையானதாகும்.

 

இந்த விமானம் 2006 முதல் சேவையில் இருந்துள்ளது. விபத்து நடந்தபோது 175 அடி உயரத்துக்கு உயர்ந்து, 184 நாட்ஸ் வேகத்தை அடைந்த பிறகு, திடீரென தரையை நோக்கி இறங்கியுள்ளது. இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கியிருக்கிறது. விசாரணை முடிய 12-18 மாதங்கள் வரை ஆகலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon