சட்டசபைக்கு பேட்ச் அணிந்து வந்த அ.தி.மு.கவினர்..!
தமிழக சட்டசபை கூட்டம் அக்டோபர் 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தியதும் கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து. தமிழக சட்டசபையின் 2-வது நாள் நிகழ்வுகள் அக்டோபர் 15-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு கைப்பட்டை அணிந்து, பங்கேற்றனர். கரூர் த.வெ.க. கூட்டநெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். அந்த கூட்டநெரிசல் சம்பவத்துக்கு த.வெ.க தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சட்டசபையில் கரூர் சம்பவம் குறித்து பேசவிடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று மூன்றாம் நாள் தொடங்கவுள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




