மதுரையில் இன்று பிரசார பயணம் தொடங்கும் நயினார்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நயினார் நாகேந்திரன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

பா.ஜனதா சார்பில் மதுரையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறோம். இதையொட்டி ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தேன். வருகிற தேர்தலின் மூலம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கள் கூட்டணியில் முக்கிய கட்சிகள் இணைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.