--- --:--:-- --

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி..!

1

பிரதமர் நரேந்திர மோடி, இரு நாள் பயணமாக வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகிறார். இதற்கான பயணத் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. ஜூலை 26 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார்.

 

அதனைத் தொடர்ந்து, இரவு 8.30 – 9.30 மணிக்கு விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்று, தூத்துக்குடி புது விமான முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பின்னர் இரவு 9.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் 26 ஆம் தேதி இரவு திருச்சியில் தங்கவுள்ளார்.

 

ஜூலை 27ஆம் தேதி திருச்சி ஹெலிபேடில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, பகல் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அதன்பின் அங்கு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். மேலும், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிடவுள்ளார். அதன்பிறகு பகல் 2.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon