--- --:--:-- --

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

1

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, அமுதா, தீரஜ் குமார் ஆகிய 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் செய்தி தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் துறைகள் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகள் குறித்த தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின்னர், தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில், அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon