த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு – வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்

த.வெ.க கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு வாபஸ் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால மனுவை அக்கட்சி திரும்ப பெற்றது.

 

பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். இடைக்கால உத்தரவு தங்களுக்கு எதிராக வந்தால், அதை சாதகமாக்கி கொள்வோம். பெயர், சின்னத்தை வைத்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கட்சி தொடங்கியதால் அவரையும் வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்ய உள்ளோம் என பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது.