காவலர்களுக்கு வார விடுமுறை.. உறுதி செய்த ஐகோர்ட்
காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை, வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணையை முறையாக நடைமுறை படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், விடுமுறை வழங்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




