பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 16 யூ-டியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து, டான் நியூஸ், சாம்னா நியூஸ், ஜியோ நியூஸ், அக்தர் யூ-டியூப் உள்ளிட்ட யூ-டியூப் சேனல்கள், இந்தியா, இந்திய ராணுவம்- பாதுகாப்புப் படைகள் குறித்து தவறான தகவலை பரப்பியதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த சேனல்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.