மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு – முதல்வர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குலத் தொழிலை ஊக்குவிப்பதாலேயே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பதாக விளக்கம் அளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் கலைஞர் கைவினை திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மேடைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கைவினத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், மத்திய அரசின் விஸ்வர்கமா திட்டத்தை ஏன் எதிர்த்தோம் என்று விளக்கம் அளித்தார்.கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டாத வகையில் உருவானதுதான் கலைஞர் கைவினைத் திட்டம்.
கலைஞர் கைவினைத் திட்டதில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டத்தில் இதுவரை 24,907 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 8,951 பயனாளிகளுக்கு 170 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கைவினைக் கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில உருவாக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசு சமூகநீதித் திட்டமாக, கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கி உள்ளது . இதுதான் காலத்தின் வெற்றி, திராவிட இயக்கத்தின் வெற்றி.இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி. அந்த அடிப்படையில்தான் இதுபோன்ற திட்டங்களைத் தீட்டுகின்றோம்.
தமிழ்நாடு இன்றைக்கு மாபெரும் வளர்ச்சியை பெற்றிருப்பதற்கு பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாலும் தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது .மேலும் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லும் வயதில், குடும்பத் தொழிலை செய்வதற்கு விஸ்வகர்மா திட்டம் தள்ளுவதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார்.
இந்நிலையில், கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டாத வகையிலும் உருவானது தான் கலைஞர் கைவினைத் திட்டம் என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும், புவிசார் குறியீடு பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியம், 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும் உட்பட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




