66 வயதில் 10வது குழந்தை பெற்ற பெண்
ஜெர்மனியில் 66 வயது பெண், 10ஆவது குழந்தை பெற்றுள்ளார். பெர்லினைச் சேர்ந்த அலெக்சாண்ட்ராக்கு, அறுவை சிகிச்சையின்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் உடல் எடை ஏழேகால் பவுண்ட். அக்குழந்தைக்கு பிலிப் என அவர் பெயரிட்டுள்ளார்.
அலெக்சாண்ட்ராக்கு 1970இல் முதல் குழந்தையும், பிறகு 8 குழந்தைகளும் பிறந்தன. உகாண்டாவில் 70 வயது பெண்ணுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




