அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!
கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் வீரையன் என்பவரைத் தாக்கியுள்ளார்.
இதனால் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில், திருவாரூர் கோர்ட், நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ₹6,000 அபராதம் விதித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




