டிஐஜி வருண்குமார் மீதான புகாரை விசாரிக்க உத்தரவு
திருச்சி மண்டல டிஐஜி வருண்குமார் மீது சாட்டை துரைமுருகன் அளித்த புகாரை ஒரு மாதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிஐஜி வருண் குமார் தனது பதவியை தவறாக பயன்படுத்துவதாக மனுவில் சாட்டை துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு தற்போது விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




