சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி..!

சென்னையில் சாலையில் கிடந்த தோட்டாக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ஏகே 47 இயந்திர துப்பாக்கியில் லோடு செய்யப்பட்ட மேகஸின் கடந்துள்ளது. அந்த வழியாக சென்ற நபர் மேகஸின்னை அடுத்து ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

 

30 தோட்டாக்களுடன் ஏகே-47 மேகஸின் லோட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. பூந்தமல்லி சிஆர்பிஎப் கம்பெனியிலிருந்து பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் சென்ற பொழுது வாகனத்தில் இருந்து தோட்டாக்கள் கீழே விழுந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து தோட்டாக்களை துணை இராணுவ படையினரிடம் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த ஏகே 47 மேகஸினை எடுத்து கொடுத்த சிவராஜ் என்பவரை காவல்துறை கிணறு பாராட்டினார்.