ராக்கிங்கில் மாணவர் தற்கொலை: சமந்தா ஆத்திரம்
கேரளாவில் ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சமந்தா பதிவிட்டுள்ளார். அதில், ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்தது மனதை நொறுக்கி விட்டது.
அந்த மாணவருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்த மாணவருக்கும் இதுபோல நிகழாத வகையில் நீதி அளிக்கப்பட வேண்டும் என சமந்தா ஆத்திரத்துடன் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




