பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம்: விஜய்
இன்று வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வருமான வரி விலக்கு வரவேற்கப்படும் அம்சம் என்றாலும் பெட்ரோல், டீசல் வரிக்குறைப்பு, ஜிஎஸ்டி வரிக்குறைப்பு ஆகியவை இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
விலைவாசியை கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் எந்த திட்டமும் இல்லாதது வருத்தமளிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




