--- --:--:-- --

திடீரென விழுந்த கேமரா மேன்.. காரில் இருந்து இறங்கி வந்த விஜய்..!

4

படம் பிடித்த கேமரா மேன்களுக்காக காரில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இறங்கி நடந்தே சென்றார். பனையூரில் உள்ள தமது அலுவலகத்திற்கு மாருதி ஸ்விப்ட் காரில் வந்த அவரை படம் பிடிக்க கேமராமேன்கள் காருக்கு முன்னும் பின்னும் ஆக வந்த வண்ணம் இருந்தனர்.

 

அலுவலகத்திற்கு அருகே ஒரு கேமரா மேன் பின்னோக்கி நடந்த படி காரை படம் பிடித்த பொழுது தடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட விஜய் காரை நிறுத்தி கீழே இறங்கி நடக்க தொடங்கியதோடு அந்த கேமரா மேனை நலமும் விசாரித்து பத்திரமாக பணியாற்றுங்கள் என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon