2 நாட்களில் விழுப்புரம் இயல்பு நிலைக்கு திரும்பும் – அதிகாரி தகவல்!

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அமுதா தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பேக்கிங், தரம் உள்ளிட்டவை குறித்து அமுதா ஐஏஎஸ் ஆய்வு செய்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் பாதிக்கப்பட்டு தற்போது சீர் செய்யப்பட்டுள்ள பகுதிகளில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.