--- --:--:-- --

ஃபெஞ்சல் புயல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்..!

1

ஃபெஞ்சல் புயல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்கள் இன்று ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து புறப்படுகின்றன.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஏற்காடு, சேரன் ரயில்கள் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி, கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தாம்பரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்றும் தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon