--- --:--:-- --

ஸ்பா உள்ளே நடக்கும் பாலியல் தொழில்..!

2

கரூரில் பாலியல் தொழில் நடப்பது குறித்த புகாரில் செய்தி வெளியானதன் எதிரொலியாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு ஸ்பாக்களுக்கு சீல் வைத்தனர்.

 

கரூரில் அரசு பள்ளி அருகிலும் பல்வேறு இடங்களிலும் செயல்படும் ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடப்பதாக ரகுவரன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தார்.

 

மேலும் அவர் வெளியிட்ட வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவை வெளியாகின. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்க்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் கரூர் சரகடிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான போலீசார் ஸ்பாக்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது கருவூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த மூன்று ஸ்பாக்களும் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சீல் வைத்தனர்.

 

இதைப் போன்று வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்பாவையும் பூட்டி சீல் வைத்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஸ்பாக்களில் இருந்து தப்பி ஓடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon