பாகிஸ்தானில் பரவும் போலியோ நோய் தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் போலியோ வாழ் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
அதன் காரணமாக குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து அளிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் பாகிஸ்தானில் போலியோவை நிரந்தரமாக ஒழிக்க முடியவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.