ராட்சத மரம் விழுந்து கார் சேதம்..!
கிருஷ்ணகிரி அருகே பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ராட்சத மரம் விழுந்ததில் கார் நொறுங்கி சேதமானது. கிருஷ்ணகிரி நகராட்சி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சாய்ந்த தைல மரத்தை அகற்றக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் சாலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நொறுங்கியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





