துபாய்க்கு வேலைக்கு சென்ற மகன் உயிரிழப்பு..மரணத்தில் சந்தேகம்..!
துபாயில் பணிக்கு சென்ற மகன் உயிரிழந்ததாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சூர்யா தனியார் நிறுவனம் மூலமாக பிளம்பிங் வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று ஒரு சில நாட்களில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இளைஞர் சூர்யா உயிரிழந்து விட்டதாக அவருடன் பணிபுரிந்து வந்த நண்பர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல்கள் குறித்த உண்மை தன்மையை அதிகாரிகள் கண்டறிந்து தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று சூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





