வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சோக சம்பவம்..!

திருப்பத்தூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

திருப்பத்தூர் அடுத்த பகுதியை சேர்ந்த மோகன் – கபினா தம்பதியின் 2 வயது குழந்தையை கிருத்திகா வீட்டில் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. திடீரென குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குழந்தையை தேடினர்.

 

ஒரு மணி நேரத் தேடுதலுக்கு பின்னர் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தனர். அப்பொழுது குழந்தை தண்ணீர் தொட்டிக்குகள் கிடந்துள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.