--- --:--:-- --

இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீசார்..!

9

சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணிடம் நகை பறித்து சென்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியில் உள்ள செங்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி.

 

இவர் சங்கபட்டி அருகே வேலைக்கு நடந்து சென்ற பொழுது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த சங்கரன்கோயிலை சேர்ந்த மூன்று பேர் பாண்டீஸ்வரியின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடுகின்றனர்.

 

இது குறித்து பாண்டீஸ்வரி அளித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று இளைஞர்களையும் வளைத்து பிடித்து கைது செய்து நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon