ரயிலில் முன் பின் தெரியாதவர்கள் கொடுத்த டீயை குடித்த 2 பெண்களுக்கு நேர்ந்த சோகம்..!
அரக்கோணம் வழியாக நாகர்கோவில் செல்லும் ரயிலில் இரண்டு பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து ஐந்து சவரன் நகை பறிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியனுூரைச் சேர்ந்த ரோகிணி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலில் புதுப்பேட்டையில் வந்துள்ளனர். சோலாப்பூர் ரயில் நிலையத்தில் ஏறிய மூன்று மர்ம நபர்கள் தேநீர் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கியதும் தாலி, கம்மல், மூக்குத்தி, மோதிரம் என 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நீண்டநேரமாக இரண்டு பெண்களும் மயக்கத்தில் இருந்ததால் ரயில்வே உதவி எண்ணுக்கு சக பயணிகள் தகவல் கொடுத்தனர்.
இரண்டு பெண்களையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





