சீர்காழி அருகே வடிகால் தூர்வாரப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள 2,280 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், 2000 ஏக்கர் விலை நிலங்கள் பகுதியாகவும் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வடிகால் தூர்வாரப்படாமல் ஆக்கிரமித்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உயர் அதிகாரிகள் தலையிட்டு வடிகால் தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.