கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்பொழுது? முக்கிய அறிவிப்பு

மூன்றாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்றுடன் பள்ளி வேலை நாள் நிறைவடைந்தது. நாளை முதல் விடுமுறை துவங்கும் நிலையில் ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

 

ஆனால் தலைமை ஆசிரியர்கள் பிற ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை பணி உள்ளிட்ட இதர பணிகளை மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தங்களுக்கு கோடை விடுமுறை இல்லையா என ஆசிரியர்கள் கொந்தளித்து உள்ளனர்.

 

அதேபோல் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மற்றும் ரம்ஜான் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு ஏப்ரல் 23, 24 ஆக தேதிகளில் மீண்டும் தேர்வுகள் நடைபெற உள்ளது.