குழந்தைகளை விரட்டி வந்த நபர்.. தர்ம அடி கொடுத்த மக்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவரங்கம் கிராமத்தில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் கண்மூடித்தனமாக தாக்கினர்.
செம்மொழி கிராமத்தைச் சேர்ந்த குமார் பக்கத்து கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டம் அருகே கன்னி வைத்து கீரிப்பிள்ளை பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அங்கே கரும்பு சாப்பிட வந்த இரண்டு குழந்தைகளை குமார் விரட்டிய பொழுது குழந்தைகள் வயலில் கத்தியதை கேட்டு வந்த கிராம மக்கள் குமாரை பிள்ளை பிடிப்பவர் என நினைத்து கண்மூடித்தனமாக தாக்கினார். காயமடைந்த இளைஞரை மீட்ட போலீசார் அவரது பெற்றோரை வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





