கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கோரிக்கை..!
கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கோரிக்கை விடுத்துள்ளது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு நேற்று பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராமுக்கு இந்த உயரிய விருது வழங்க வேண்டும் என அந்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எக்ஸ் தளத்தில் கன்ஷிராமுக்கும் மத்திய பாஜக அரசு விரைவில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





