--- --:--:-- --

ஏடிஎம் அட்டையின் கவரிலேயே எழுதப்பட்டிருந்த பின் நம்பர்.. 35 ஆயிரம் ரூபாய் அபேஸ்..!

3

டிஎம் அட்டையில் பின் நம்பரை எழுதி வைக்க கூடாது என பலமுறை போலீசார் எச்சரித்துள்ள நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் அதே தவறை செய்ததால் தனது 35 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை இழந்துள்ளார்.

 

அழகப்பன் நகரை சேர்ந்த குமார் பெரிய கடை வீதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுத்தபோது தனது ஏடிஎம் கார்டை தவற விட்டுள்ளார்.

 

மறுநாள் அவரது வங்கி கணக்கிலிருந்து 35 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை எடுத்து ஏடிஎம் அட்டையின் பயன்பாட்டை தடை செய்ததோடு போலீசில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார் பாலா, பரணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon