--- --:--:-- --

என்னை சந்திக்க வர வேண்டாம் – கனிமொழி எம்.பி. அறிக்கை

6

தனது பிறந்தநாளன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் தன்னை சந்திக்க வருவதையும் பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

 

இந்த சூழலில் தனது பிறந்த நாளன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னை சந்திக்க வருவதையும் பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்களை அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon