முரசொலி பாசறை பகுதியில் வெளியான கட்டுரைகள்..!
முரசொலி பாசறை பகுதியில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்ட புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முரசொலியில் கடந்த ஓர் ஆண்டாக முரசொலி பாசறை என்ற பகுதியில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணியை மொத்தம் உள்ள முத்தமிழறிஞர் பதிப்பகம் செய்துள்ளது. திராவிட போராளிகள், டாக்டர் கலைஞர் திராவிட மாடல் அரசு உள்ளிட்ட ஒன்பது தலைப்புகளில் புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த ஒன்பது புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு முத்தமிழ் அறிஞர் பதிப்பகத்தையும் தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த புத்தகங்கள் இன்று நடைபெறும் புத்தக கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





