--- --:--:-- --

கேப்டன் விஜயகாந்த் இறுதி மரியாதை: கண்ணீர் வடித்த நடிகர் விஜய்

2

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய இவர், இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள், கேப்டன் பிரபாகரன் உட்பட 150-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

 

இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுவரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அங்க அசைவுகள் இல்லாமல் துயில் கொண்டிருந்த விஜயாகாந்தின் பூதஉடலைக் கண்டு தீரா துன்பம் அடைந்த விஜய் கண்ணீர் வடித்து தனது மன வலியை வெளிப்படுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon