மறைந்தார் விஜயகாந்த்..தொண்டர்கள் கண்ணீர்..தலைவர்கள் இரங்கல்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்த நிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுதனர்.தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் ஆளுமையான, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் – மத்திய இணை அமைச்சர் எல் முருகன்.
தேமுதிக நிறுவனர் விஜய்காந்த் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்; அவருடைய குடும்பத்தினருக்கும் அக்கட்சியின் செயல் வீரர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் – ப.சிதம்பரம்
திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர் விஜயகாந்த், அவரை, இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் – டி.டி.வி.தினகரன்.
என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது – சரத்குமார்
விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடலை பார்த்து மனைவி பிரேமலதா கதறி கதறி அழுதார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, தேமுதிக கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




